என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஐக்கிய அரபு அமீரக தூதர்
நீங்கள் தேடியது "ஐக்கிய அரபு அமீரக தூதர்"
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமிரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaFloodRelief #UAE
புதுடெல்லி:
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி வழங்க இருப்பதாக அம்மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் தெரிவித்து இருந்தார். அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஷயத் அல் நயான், பிரதமர் நரேந்திர மோடியுடன் டெலிபோனில் பேசியபோது, இத்தகவலை தெரிவித்தார் என்றார்.
இதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா கூறும்போது, ‘‘கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மறு சீரமைப்பு பணிக்கு தேவையான உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான குறிப்பிட்ட அளவு நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’’ என்றார்.
அதை தொழில் அதிபர் யூசுப் அலி மறுத்துள்ளார். அவரது தகவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்த விவகாரத்தில் அவரது பெயர் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக இந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை (வழக்கு) தொடரப்படும். யூசுப் அலியின் ‘லூலூ’ குருப் ஏற்கனவே முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kerala #KeralaFloods #KeralaFloodRelief #UAE

ஆனால் வெளிநாடுகளின் நிதி உதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்தநிலையில் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமிரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா
இதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா கூறும்போது, ‘‘கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மறு சீரமைப்பு பணிக்கு தேவையான உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான குறிப்பிட்ட அளவு நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’’ என்றார்.
முன்னதாக கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரக மன்னர் ஷேக் கலிபா பின் ஷயத் அல் நயான் துபாயில் வாழும் கேரள தொழில் அதிபர் எம்.ஏ.யூசுப் அலி மூலம் முதல்-மந்திரி பினராய் விஜயனிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
அதை தொழில் அதிபர் யூசுப் அலி மறுத்துள்ளார். அவரது தகவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்த விவகாரத்தில் அவரது பெயர் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக இந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை (வழக்கு) தொடரப்படும். யூசுப் அலியின் ‘லூலூ’ குருப் ஏற்கனவே முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kerala #KeralaFloods #KeralaFloodRelief #UAE
×

X